உடல் நல குறிப்புகள் தமிழில்
மனிதர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடம், சூழல் மற்றும் உணவு, உறைவிடம் போன்றவற்றால் தான் பெரும்பாலும் நோய்க்கு ஆளாகின்றனர். குறிப்பாக உடல் நலம் பேணுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதால்தான் பற்றாக்குறை அல்லது மிகுதி காரணமாக உடல் நோய்வாய்ப்படுகிறது. உடலை சமநிலைப்படுத்தினால் எந்த சீதோஷ்ண நிலையிலும் எந்த நோயும் நம்மை அணுகாது. தற்பொழுது உள்ள இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் ஒரு மனிதன் முழுமையான சமநிலைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள நேரமிருப்பதில்லை. அதனால் சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் உட்பட கேன்சர், எஸ்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள் வரை மனிதனை ஆக்கிரமித்து உயிருக்கே உலை வைக்கிறது. என்ன செய்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். சின்ன சின்ன நோய்களுக்கு என்னென்ன மருத்துவங்கள் மற்றும் தடுப்பு முறைகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்வோம். சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை