அம்மாவா, அக்காவா? பாட்டியா? மீண்டும் சினிமாவிற்கு வரும் அசின் !

அம்மாவா, அக்காவா? பாட்டியா? மீண்டும் சினிமாவிற்கு வரும் அசின் ! 2000 ம் தொடக்கங்களில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டவர் அசின். மலையாளத்தில் அறிமுகமான அவர், அதன் பிறகு தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தமிழில் முன்னணி நாயகம் "தளபதி" விஜய் உடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் அடித்தது. அதன் மூலம் தமிழில் நன்கு அறிமுகமான நடிகையாக மாறினார். சினி பீல்டில் பிசியாக இருந்தபோது அவர் பற்றிய கிசு கிசுக்களும் பஞ்சமில்லாமல் இருந்தது. இந்நிலையில் திடீரென சினிமாவை விட்டு விலகிய அசின் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அசினுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆரின் என்ற அந்த குழந்தையின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் மீண்டும் அசின் சினிமாவில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இன்ஸ்டா கிராமில் வெளியிட்டப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. 2000 தொடக்கங்களில் பார்த்த அதே அசின் அப்படியே கட்டழகு குறையாமல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.