பிரௌசர் மிக மெதுவாக இயங்குகிறதா? தீர்வு

சில நேரங்களில் கணினியில் உள்ள பிரௌசர் மிக மெதுவாக இயங்கி நம் பொறுமையை சோதிக்கும். இன்டர்நெட் ஸ்பீட் குறைந்துவிட்டதா என சோதித்தால் அது சரியாக இருக்கும். ஆனால் பிரௌசர் மட்டும் இயங்க அதிக நேரம் எடுத்திடும். அதுபோன்ற சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். பிரௌசர் மிக மெதுவாக இயங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானதாக அதில் தேவையில்லாத டூல்பார்கள் இன்ஸ்டால் வைப்பது தான். இந்த டூல்பார்கள் பிரௌசர் தொடங்கிடும் வேகத்தை மட்டுப்படுத்திவிடும். Slow Browser - Solution ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் செக்யூரிட்டி புரோகிராம்கள் இயங்குவதாலும் கம்ப்யூட்டர் - பிரௌசர் மெதுவாக இயங்கும். தீர்வு: நாமாக சில விஷயங்கள் செய்வதன் மூலம் பிரௌசர்/கம்ப்யூட்டர் வேகத்தை அதிப்படுத்திடலாம். பிரௌசரில் செட்டிங்ஸ் சென்று பிரௌசரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள தேவையில்லாத extension களை நீக்குவதன் மூலம் பிரௌசரின் வேகத்தை அதிகரிக்க முடியும். History சென்று Clear History கொடுப்பதன் மூலம் பிரௌசரில் தேவையில்லாத Catche கள் நீக்கப்பட்டு, பிரௌசர் வேகம் அதிகரிக்கும். மென்பொருட்கள்: பிர...