பணம் சம்பாதிக்க ஆக்கப்பூர்வமான 100 வழிகள்

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆக்கப் பூர்வமாக அவற்றைச் செயல்படுத்திட வேண்டுமெனில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வழிகளைத் தேர்ந்தெடுத்தலே போதுமானது. பணத்தின் முக்கியத்துவம் வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனில் அதற்கு நிச்சயம் பணம் தேவை. அந்த பணத்தை எவ்வாறு ஈட்டுவது? என்ன செய்தால் உங்களைத் தேடி உங்களை தேவைகளுக்கு அதிகமாகவே பணம் சம்பாதிக்க முடியும்? இந்தக் கேள்விகளை உங்களை நீங்களே முதலில் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த கேள்விக்கான விடை என்னவாக இருக்கிறது நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? பணம் சம்பாதிக்க யோசனைகள் சரியான விடைகள் உங்களிடம் இல்லையா? அப்படியென்றால் சுற்றும் முற்றும் பாருங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என கவனியுங்கள். அன்றாட உங்களது செயல்களை ஊன்று கவனியுங்கள். ஆம். நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்கும். உங்களைச் சுற்றி உள்ளவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு தொழில், வேலை போன்றவற்றைச் செய்து கொண்டிருப்பார்கள். இவற்றிற்கெல்லாம் அடிப்படை மூல காரணம் பணம் சம்பாதிப்பதுதான். அதுதான் அவர்கள் குறிக்கோளாக இருக்கும். கீரை விற்கும் கண்ணம்மா முதல் ...