ஆன்ட்ராய்ட் போனில் லைவ் போட்டோ எடுப்பது எப்படி?

முதலில் லைவ் போட்டோ என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். ஒரு போட்டோ எடுத்தால் உள்ளது உள்ளபடியே அசையாமல் இருப்பது சாதாரண போட்டோ. அதே போட்டோ சில நொடிகள் அசைந்து காட்சி கொடுப்பது போல் எடுத்தால் அது LIVE PHOTO. ஆப்பிள் ஐபோன் 6, 6+ ல் இதுபோன்ற படங்கள் எடுக்கும் வசதிகள் கொடுக்கப்பட்ட இருந்தது. தற்பொழுது ஆன்ட்ராய்ட் போனிலும் நகரும் படங்கள் எடுக்கலாம். சாதாரண படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கக்கூடியவை Live Photos. ஆன்ட்ராயட் போனில் லைவ் போட்டோ எடுப்பதற்கு உதவும் அருமையான ஆன்ட்ராய்ட் செயலி. கேமிரா எம்ஸ் . இச்செயிலின் மூலம் மேலே காட்டப்பட்ட போட்டோவைப் போன்று உங்கள் ஆன்ட்ராய்ட் போனிலும் எடுத்து மகிழலாம். மேலிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து ஆப் டவுன்லோட் செய்து செயல்படுத்தினால் போதும். சில அழகான அசைவுகளுடன் படங்கள் எடுத்து பார்க்கும்பொழுது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். உதாரணமாக குழந்தை சிரிப்பது. குறும்பு தனங்கள் செய்யும் காட்சிகள். குட்டி விலங்களின் சேட்டைகள் இப்படி. இயற்கையில் மரங்கள் அசைவது, பூக்கள் அசைந்தாடுவது போன்ற காட்சிகள் லைவ் போட்டோ எடுக்க உக...