அடோப் போட்டோஷாப் 7 மென்பொருள் டவுன்லோட் செய்ய

போட்டோஷாப் - மென்பொருள் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைய காலத்தில் கிராபிக்ஸ் செய்ய பயன்படும் அற்புதமான மென்பொருள் அது. பிளக்ஸ் பேனர் (flex Banner) , திருமண பத்திரிக்கைகள், பத்திரிக்கை அட்டை படங்கள், விதவிதமான மணமக்கள் போட்டோக்கள் (The bride's photos) என அனைத்துவித விஷேசங்களுக்கும் எடுக்கப்படும் புகைப்படங்களை மேலும் அழகூட்ட பயன்படும் மென்பொருள் போட்டோஷாப் . போட்டோ ஸ்டுடியோ (Photo Studio) வைத்துள்ள நண்பர்கள், போட்டோ கிராபர்கள், செல்போனில் படம் எடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் போட்டோஷாப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் அடிப்படையான இன்னும் நிறையபேர் பயன்படுத்துவது போட்டோஷாப் 7.0. சாதாரண பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாலும் ஸ்டுடியோவில் பயன்படுத்துவது போட்டோஷாப் மென்பொருள்தான். அப்படிப்பட்ட போட்டோஷாப் 7 மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதைப் பயன்படுத்துவதும் மிக எளிதுதான். ஒரு கம்ப்யூட்டர், அதில் போட்டோஷாப் மென்பொருள் இருந்தால் போதும். யாருடைய உதவியும் இன்றி நீங்களே போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம். போட்டோஷாப் டுடோரியல் லட்சக்கணக்கான போட்டோஷாப் டுடோர...