கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய பிரச்னைகளுக்கான தீர்வுகள் !

கம்ப்யூட்டரில் ஏற்படும் சிறிய சிறிய பிரச்னைகளை நாமே சரி செய்திடலாம். அது லேப்டாப் ஆக இருந்தாலும் சரி, டெஸ்க்டாப்பாக இருந்தாலும் சரி. அவ்வறானா பிரச்னைகளை சரி செய்திட தெரிந்துகொண்டால் ரிப்பேருக்காக பணம் செலவழிக்கும் நிலை வராது. அவ்வப்பொழுது ஏற்படும் சிறு பிரச்னைகளை உடனடியாக சரி செய்துவிடுவதால் கம்ப்யூட்டர் நீண்ட நாட்கள் எந்த பிரச்னையுமின்றி இயங்கும். கம்ப்யூட்டரில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் உங்கள் கம்ப்யூட்டர் பிரச்னையை நீங்களே தீர்ப்பது கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க கம்ப்யூட்டர் வேகம் குறைவதற்கு முக்கிய காரணம் அதில் அதிமான புரோகிராம்கள் இடம்பெற்றிருப்பதுதான். அடுத்த முக்கியமான ஒரு காரணம் வைரஸ் இருப்பது . பின்னணியில் அதிக புரோகிராம்கள் இயங்கி கொண்டிருப்பது. மேலும் சில ஸ்டார்ட்-அப் புரோகிராம்கள் தொடர்ந்து இயங்குவது. தீர்வு Start பட்டனை அழுத்தி தோன்றும் சர்ச் விண்டோவில் 'msconfig' என டைப் செய்து, என்டர் பட்டனை தட்டவும். இப்போது " System Configuration " விண்டோ தோன்றும். அதில் " Start UP " டேபை கிளிக் செய்யவும் ஸ்டார்ட் அப்பில்...