தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்கப் பயன்படும் மென்பொருள்

வணக்கம் நண்பர்களே...! நலமா.? கடந்த காலங்களை நினைக்க நினைக்க..ஒரு நமட்டு சிரிப்புதான் வருகிறது. காரணம் உலகம் அழியப் போகிறது என படித்த அறிஞர்கள் முதல் பாரமர்ர்கள் வரை அனைவருமே ஒருமனதாக நம்பி, ஒருவித பயத்துடனும், படப்படப்புடனும் இருந்துகொண்டிருந்தனர். ஒருவழியாக அவர்கள் குறிப்பிட்ட நாளும் கடந்துபோய்விட்டது.. இறுதியாக வெறும் கட்டுக்கதை என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. இடைப்பட்ட இந்த காலத்தில் உலகம் அழிந்துவிடும் என்று ஒரு சிலர் செய்த பைத்தியக்காரத் தனங்களை நினைத்தால்தான் சிரிப்பு வருகிறது.. சரி.. பதிவிற்கு வருவோம்.. என்னதான் கணினியில் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் அவர்களையும் அறியாமல் சில தவறுகளை செய்துவிடுவார்கள். இது மனித இயல்பு.. தவறுதலாக ஒரு கோப்பை அழித்துவிட்டு, மீண்டும் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவோம். அவ்வாறு மீட்கும் முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டால் பயங்கரமான டென்சன் ஏற்படும். வீட்டில் பிள்ளைகள் கணினியில் விளையாடும்பொழுது தவறுதலாக நாம் வைத்திருக்கும் கோப்புகளில் கைவைத்துவிடுவார்கள். இவ்வளவுநாள் இங்கேதானே வைத்தேன்.. ஆனால் கோப்பைக் காணவில்லையே என்று க...