தமிழர்களுக்குப் பயன்படும் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !
வணக்கம் நண்பர்களே..! இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு, ஒவ்வொருவர் கையிலும் ஸ்மார்ட்போன்/ஆன்ட்ராய்ட் போன் உள்ளது. ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பயனுள்ள அப்ளிகேஷன்களை வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தமிழர்கள் பயன்படுத்துவதற்காக சில அப்ளிகேஷன்கள் கூகிள் ப்ளே மூலம் பெறலாம். அது என்னென்ன அப்ளிகேஷன்? எதற்குப் பயன்படுகிறது? என்பது குறித்து இங்கு விளக்கமாக தெரிந்துகொள்ளலாம். 1. கூகிள் டிரான்ஸ்லேட் / Google Translate: Google Translate மொழிப்பெயர்ப்பு ஏற்ற ஒரு கருவியாக செயல்படுகிறது என்பது நமக்கெல்லாம் தெரியும். எந்த ஒரு மொழியிலிருந்தும் மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய இது பயன்படுகிறது. 17 மொழிகளில் குரல் பதிவின் வழியாகவும் மொழி பெயர்க்கலாம். இந்த Google Translate மூலம் உலக மொழிகளில் 64 மொழிகளை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்துகொள்ளலாம். Download Google Translate Android App 2. ஆங்கிலம்- தமிழ் அகராதி - English To Tamil Dictionary: சாதாரணமாக நாம் ஆங்கிலத்தில் படிக்கும்போது அவற்றுக்கான பொருள் ஓரளவிற்கு புரிந்துகொள்வோம். ஆனால் க...