உங்கள் கணினியில் டிவைஸ் டிரைவர்(Device Driver) பேக்அப் எடுக்க இலவச மென்பொருள்!

வணக்கம் அன்பு சகோதரர்களே..!! நலமா? மற்றுமொரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோம். இன்றும் ஒரு புதிய பயனுள்ள மென்பொருளைப் பற்றியே இந்த பதிவு அமையப் போகிறது. விண்டோஸ் 7 - டிவைஸ் டிரைவர் உங்கள் கணினி இருக்கிறது அல்லவா? அதில் நிறைய பகுதிகள் இருக்கிறது. உங்களுக்கு அடிப்படைக் கணினி அறிவு இருக்கிறதெனில் இப்பதிவு முழுவதும் உங்களுக்கு எளிதாக புரியும். நீங்கள் நெடுங்காலமாக கணினியைப் பயன்படுத்தி வருகிறீர்களெனில், உங்கள் கணினிக்கான மென்பொருள்களையும், கணினி இயக்கத்திற்கு தேவையான முக்கிய மென்பொருகளான இயங்குதளம்(Operating System) போன்றவைகளை நிச்சயம் பேக்அப் எடுத்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். அப்போதுதான் உங்கள் கணினியில் ஏதேனும் கோளாறு ஏற்படினும், அதை சரிசெய்ய முடியும். உங்கள் கணினி திடீரென இடைநிறுத்தம் செய்யலாம். செயலிழந்து போகலாம்.. அப்போது என்ன செய்ய முடியும்.? புதிதாக தான் கணினியை ஃபார்மட்(Format) செய்ய வேண்டும். உங்கள் கணினியை பார்மட் செய்வது என்பதும் இப்போது ஒரு எளிதானதொரு வேலைதான். இதைப் பற்றி தனிப் பதிவில் காண்போம். லினக்ஸ் டிவைஸ் டிரைவர் இப்போது நான் சொல்ல வந்ததே இதுதான். உங்கள்...