குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள்
குழந்தைகள் வளர அவசிய தேவை சத்தான உணவுகள். அவற்றை தரம் பார்த்து சரியான முறையில் கொடுத்து வர, போதிய ஊட்டச்சத்துப் பெற்று நோய் நொடிகள் இன்றி விரைவில் வளருவர். சிறு வயது முதல் போதுமான சத்தான உணவுகளை உண்டு வரும் குழந்தைகள் வளர்ச்சியில் எந்த பாதிப்பும் இன்றி, ஆரோக்யமாக வளருவர். படிப்பில் சுட்டியாக திகழுவர். உங்கள் குழந்தைகளும் சுட்டியாக, ஆரோக்கியமாக இருக்க என்னென்ன அடிப்படை உணவுகள் கொடுக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். முட்டை, பால், மாமிசம், முழுதானிய உணவுகள், சிக்கன், சோயா பீன்ஸ், காற்கறிகள், பழங்கள், மற்றும் நீர். முட்டை: இதில் அதிக புரத ச்த்து உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது. சிறு வயது முதல் தினம் ஒரு முட்டை கொடுத்து வர குழந்தைகள் எந்த ஒரு குறைபாடின்று வளருவர். இதை பொறியல் செய்து கொடுப்பதைவிட நீரில் வேக வைத்து அவித்து கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதுவே நல்லது. இது செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. உடல் வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது. எனவே பெற்றோர்கள் தவறாமல் பிள்ளைகளுக்கு ஒரு முட்டை கொடுத்து வளர்க்கவும். முழு தானியங்கள் - உணவுகள்: கம்பு, சோளம், கோதுமை என முழு த